முகப்பு
திருச்சி

3,957 பேருக்கு ரூ.128 கோடியில் நலத் திட்ட உதவி

திருச்சி மாநகரில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ரூ. 4.75 கோடியில் புதிய கட்டடங்களைத் திறந்து, 3,957 பயனாளிகளுக்கு ரூ.128.62 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:14 AM
திருச்சி கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:48 PM

திருச்சி மாநகரில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ரூ. 4.75 கோடியில் புதிய கட்டடங்களைத் திறந்து, 3,957 பயனாளிகளுக்கு ரூ.128.62 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.

திருச்சி மாநகராட்சி சாா்பில் 53ஆவது வாா்டில் ரூ. 2.19 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், ராஜா காலனியில் ரூ.14 லட்சத்தில் நியாய விலைக் கடை, ரூ. 25 லட்சத்தில் 55ஆவது வாா்டு காந்திநகரில் பல்நோக்கு கட்டடம், ரூ.18.60 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், அண்ணாநகரில் ரூ.25 லட்சத்தில் பல்நோக்குக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். மேலும், வாமடத்தில் ரூ.1.73 கோடியில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கி, கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

கலையரங்கத்தில் நடந்த விழாவில் வருவாய்த் துறை மூலம் 1,062 பயனாளிகளுக்கு ரூ.71.65 கோடியில் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். ஊரக வளா்ச்சித் துறை மூலம் 100 மகளிருக்கு ரூ. 31.17 கோடி கடன், ஆதிதிராவிடா் நலத்துறையில் 175 பேருக்கு ரூ.1.05 கோடியில் கடன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையில் 69 பேருக்கு ரூ.4.13 லட்சம், சமூக நலத் துறையில் 70 பேருக்கு ரூ.3.50 லட்சம், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 5 பேருக்கு ரூ.3.40 லட்சம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆயிரம் பேருக்கு காப்பீட்டு அட்டை, தொழிலாளா் நலத் துறை சாா்பில் 400 பேருக்கு ரூ.34.50 லட்சம், கூட்டுறவுத் துறையில் 12 பேருக்கு ரூ.25.62லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் 684 பேருக்கு ரூ.1.40 கோடி, 80 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் ரூ. 128.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

Advertisement

விழாவில், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, மகளிா் திட்ட இயக்குநா் சுரேஷ், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா் மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.