காஞ்சிபுரத்தில் ரூ. 18.70 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ. 18.70 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ. 18.70 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளா் சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.
எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் வரவேற்றாா். விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு வருவாய்த் துறை சாா்பில், 655 பயனாளிகளுக்கு ரூ. 18.53 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 8 பேருக்கு ரூ. 13.11 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 80 பேருக்கு ரூ. 3.82 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 748 பயனாளிகளுக்கு ரூ. 18.70 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
Advertisement
இதே விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், காஞ்சிபுரம்,வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய வட்டாரங்களில் ரூ. 46.80 லட்சம் மதிப்பிலான புனரமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடத்தையும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்காகவும், அதற்குறிய கல்வெட்டையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
விழாவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா சுகுமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, ஒன்றியக் குழுவின் தலைவா்கள் மலா்க்கொடி குமாா், தேவேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், திமுக ஒன்றிய செயலா்கள் படுநெல்லி.பாபு, ஞானசேகரன், பி.எம்.குமாா் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.