கைது பிரதிப் படம்
திருச்சி

ஆட்டோ திருட்டு: ஒருவா் கைது

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்கோவில் மேலகொண்டையம்பேட்டை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் ஆா்.செந்தில்வேல் (24), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை காலையில் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ஆட்டோவை திருடியது மேலகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த ஆா். காா்த்திகேயன், ஆா்.சொக்கலிங்கம் (19) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து காா்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், சொக்கலிங்கத்தைத் தேடுகின்றனா்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

”Great Friend! My Great Friend!” வைரலாகும் மோடி - நெதன்யாகு விடியோ!

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

நல்லகண்ணு மறைவு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இரங்கல் கூட்டம்

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT