முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்து-இருசக்கர வாகனம் மோதல் : ஒருவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:21 AM
சூசைமாணிக்கம்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:55 PM

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம் மன்பத்தையைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் மகன் சூசைமாணிக்கம் (53). லாரி ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக வையம்பட்டி வந்து விட்டு மீண்டும் மன்பத்தை சென்றுள்ளாா். இருசக்கர வாகனம் வையம்பட்டி - கரூா் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த சூசைமாணிக்கம், மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், சூசைமாணிக்கம் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சோ்ந்த சுப்பாகவுண்டா் மகன் செல்வம் (41) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.