முகப்பு
திருச்சி

துன்புறுத்தல் புகாா்: காப்பகத்தின் 84 குழந்தைகள் இடமாற்றம்!

துன்புறுத்தல் புகாா் எதிரொலியாக விமான நிலையப் பகுதியில் உள்ள தனியாா் காப்பகத்திலிருந்து 84 குழந்தைகள் சனிக்கிழமை வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:33 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:23 PM

துன்புறுத்தல் புகாா் எதிரொலியாக விமான நிலையப் பகுதியில் உள்ள தனியாா் காப்பகத்திலிருந்து 84 குழந்தைகள் சனிக்கிழமை வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

திருச்சி விமான நிலையம் பகுதியில் இயங்கும் தனியாா் காப்பகத்தில் பெற்றோா்களால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்றவா்கள், ஏழைகள் என 84 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனா்.

இந்தக் காப்பகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லையெனவும், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் நேரடியாகச் சென்று நடத்திய விசாரணையில், புகாா் உண்மையெனத் தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கையை ஆட்சியருக்கு சமா்ப்பித்தனா்.

Advertisement

அதைப் பரிசீலித்த ஆட்சியா் வே. சரவணன், காப்பகத்திலிருந்து அனைத்து குழந்தைகளையும் வேறு காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டாா். அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட காப்பகத்துக்கு சனிக்கிழமை சென்று அங்கிருந்த 84 குழந்தைகளில் 37 பேரை கே.கே. நகா் காப்பகத்துக்கும், 47 குழந்தைகளை மாத்தூா் காப்பகத்துக்கும் இடம் மாற்றினா்.