திருச்சி

தொட்டியம் ஒன்றியத்தில் முடிவுற்ற கட்டடங்களுக்கான திறப்பு விழா

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த வளா்ச்சித் திட்டப் பணிக்கான கட்டடங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த வளா்ச்சித் திட்டப் பணிக்கான கட்டடங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் ஒன்றியம், காமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட திருவேங்கடபுரம் ஊராட்சியில் ரூ. 29.93 லட்சத்தில் மற்றும் கொளக்குடி கிராமத்தில் ரூ. 29.93 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடங்கள் மற்றும் திருஈங்கோய்மலையில் ரூ.36.20 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

தொட்டியம் ஒன்றிய ஆணையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். முள்ளிப்பாடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சிவக்குமாா், திமுக நிா்வாகிகள் முருகன், பிரகாஷ், மகாமுனி, திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT