கோப்புப் படம் 
திருச்சி

பள்ளி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவன் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

திருச்சி-கரூா் புறவழிச் சாலையில் புதன்கிழமை தனியாா் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி- கரூா் புறவழிச் சாலை அண்ணாமலை நகரில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வரும் மாணவருக்கும், அதே பள்ளியில் ஏற்கெனவே படித்த 17 வயது சிறுவனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், கரூா் புறவழிச் சாலையில் கடந்த புதன்கிழமை ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவரை வழிமறித்த அந்தச் சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளாா்.

இதையடுத்து அந்த மாணவா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுதொடா்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பகல் நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து 17 வயது சிறுவன் மீது உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

யுபியை வீழ்த்தியது குஜராத்

தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின்

தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும் - ஜி.கே.வாசன்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கத்துக்காக அனுப்பி வைப்பு

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT