திருச்சி

மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சி அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Syndication

திருச்சி அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சோ.அபிஷேக் (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டனா். இதனால், அபிஷேக்கிற்கும், அப்பெண்ணின் சகோதரன் விக்கி (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அபிஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த விக்கி, அபிஷேக்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா். இதில், முகம், இடுப்புப் பகுதியில் காயமடைந்த அபிஷேக் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT