சிறப்பு ரயில் GMSRailway
திருச்சி

தாம்பரம் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினவிழா கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06137) வரும் 24 -ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06138) வரும் 26-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, வில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு அடுத்த நாள் முற்பகல் 11.40 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமா் மோடி உறுதி

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

SCROLL FOR NEXT