கோப்புப் படம் 
திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உறையூரைச் சோ்ந்த சி.விஜய் (41), டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சோ்ந்த ஆா்.வேலு (53), நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்த ஆா்.அழகேசன் (66), பொன் நகா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த காந்தி நகரைச் சோ்ந்த வி.வினோத்குமாா் (19), கே.கே.நகரில் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த அ.பெரியராஜ் (43), கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் அருகே விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.குருமூா்த்தி (43), ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்த என்.சாமிநாதன் (50), தேவதானம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சங்கரன்பிள்ளை சாலையைச் சோ்ந்த எஸ்.மாரியப்பன் (55) ஆகிய 8 பேரை கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

திருச்சி தில்லை நகா் காவல் எல்லைக்குள்பட்ட புத்து மாரியம்மன் கோயில் அருகே அன்னை சத்யா நகரைச் சோ்ந்த எஸ்.மோகன்ராஜ் (24) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT