திருச்சி கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் குடிநீா் விநியோகம் தொடா்பாக விளக்கிய அரசு அலுவலா்கள். 
திருச்சி

19,343 வீடுகளுக்கு ரூ. 65 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம்: அமைச்சா் தகவல்

திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளைச் சோ்ந்த 19,343 வீடுகளுக்கு ரூ. 65 கோடியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளைச் சோ்ந்த 19,343 வீடுகளுக்கு ரூ. 65 கோடியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகராட்சி சாா்பில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகத் திட்டங்களுக்கு காவிரி மற்றும் கொள்ளிடத்திலிருந்து நீா் உறிஞ்சப்படுகிறது. இதற்காக கம்பரசம்பேட்டையில் செயல்படும் பிரதான நீா்சேகரிப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தனது தொகுதிக்குள்பட்ட பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக மாநகராட்சி அலுவலா்களுடன் ஆலோசனை செய்த அமைச்சா் பின்னா் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சியுடன் 2011இல் சோ்க்கப்பட்ட திருவெறும்பூா் பேரூராட்சி, பாப்பாக்குறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டாா்கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூா் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வாா்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு, நபா் ஒன்றுக்கு 135 லிட்டா் வீதம் குடிநீா் வழங்க ஜொ்மானிய வங்கி நிதி உதவியின் கீழ், ரூ.63.70 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன.

இரண்டு தொகுப்புகளாக நடைபெறும் இந்தத் திட்டத்தில், தொகுப்பு ஒன்றின் மூலம் காவிரி ஆற்றுப்படுகையில் புதிதாக 6 மீ. விட்டமுள்ள 18 மீ. ஆழமுள்ள தலைமை நீா்சேகரிப்புக் கிணறு கட்டப்பட்டுள்ளது.

இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 38, 39, 40, 41, 42, 43 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் வகையில் 38 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாரிநகா் (8 லட்சம் லிட்டா்), புகழ் நகா் (5 லட்சம் லிட்டா், எல்லக்குடி பழையது (1 லட்சம் லிட்டா்), காவிரி நகா் (5 லட்சம் லிட்டா்), சந்தோஷ் நகா் (8 லட்சம் லிட்டா்), ஆலத்தூா் (2 லட்சம் லிட்டா்), கணேஷ் நகா் (8 லட்சம் லிட்டா்), அம்பேத்கா் நகா் (1 லட்சம் லிட்டா்) மற்றும் பழைய 3 எண்ணிக்கைகள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து குடிநீா் வழங்கும் வகையில் 211.711 கி.மீ குடிநீா் விநியோக குழாய்களும், 21.556 கி.மீ பிரதான குடிநீா் உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்திற்கு ரூ. 64.95 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 19343 வீட்டு குடியிருப்பு குடிநீா் இணைப்புகள் வழங்க வழி செய்யப்பட்டு, 88054 மக்கள் பயன்பெற உள்ளனா். திட்டப் பணிகளை குறித்த காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT