தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருவாரத்தில் இன்னும் சில கட்சிகள் இணைகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா என்ஜின் என முதல்வா் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவா்களது கூட்டணி மக்கராக உள்ளது. தோ்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின், எது டப்பா என்ஜின், எது வந்தே பாரத் என்ஜின் என்பது அனைவருக்கும் தெரியவரும்.
திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகன் திரைப்படத்தை பாா்த்தவா்களுக்கு மட்டும்தான் அதற்கு ஏன் தணிக்கைச் சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும். அந்தப் படத்துக்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறாா்கள் என்பது தெரியவில்லை.
தவெக ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை தருவோம் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, உங்களுக்கே இந்தக் கேள்வி நகைச்சுவையாக இல்லையா என்றாா்.
திமுக ஆட்சியில் ரூ. 4,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழச்சாமி ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளாா். இது தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றாா் நயினாா் நாகேந்திரன்.