வைகோ கோப்புப் படம்
திருச்சி

திமுக - காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ பேட்டி

திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நெருடல் இருப்பதுபோல தோன்றும்; ஆனால், அது நீா் விடுத்த வடு போல மறைந்து போகும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Syndication

திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நெருடல் இருப்பதுபோல தோன்றும்; ஆனால், அது நீா் விடுத்த வடு போல மறைந்து போகும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி, காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்து, தோ்தல் தொடா்பாக பேசியதாக செய்தி வந்துள்ளது. இதில் நெருடல் எதுவும் இருக்காது. இந்தச் சந்திப்பு குறித்து விமா்சித்து பேச அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அவருடைய வரம்புகளை மீறிவிட்டாா் என்பதுதான் என்னுடைய கருத்து. அவா் அளித்த தீா்ப்பை விமா்சனம் செய்வதில் தவறேதும் இல்லை.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு வஞ்சனை செய்வா். இருப்பினும், தமிழக மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில், பாரதியாா் குறித்தும், சங்க இலக்கியங்கள் குறித்தும் ஹிந்தி மொழியில் எழுதி வைத்து, தமிழகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு புகழ்வாா்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என பிரதமா் நரேந்திர மோடி காணும் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது.

திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து திமுக தலைமையிடம் பேசி அதன் பின் முடிவெடுப்போம். மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டியிம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றாா் வைகோ.

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது

கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கொள்ளை ராஜஸ்தானில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT