முகப்பு
திருச்சி

மணப்பாறை ரயில் நிலையம் காணொலிக் காட்சியில் பிரதமா் திறந்து வைத்தாா்

Updated On : 1 மார்ச், 2026 at 9:07 PM
மணப்பாறை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரதமா் மோடியின் நிகழ்ச்சியை நேரலையில் பாா்த்த அனைத்துக்கட்சியனா்.
பகிர்:

மணப்பாறையில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை, மதுரையிலிருந்து பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், ரூ.12.58 கோடி மதிப்பில் மணப்பாறை ரயில் நிலையம், மேம்பட்ட வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புடன் கூடிய நவீன, அணுகக்கூடிய மற்றும் பயணிகளுக்கு ஏற்ற வசதியாக மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலா் லலித்குமாா் மன்சுஹானி, மதுரை கோட்ட தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், கரூா் பாராளுமன்ற உறுப்பினா் ஜோதிமணி, மணப்பாறை சாா்பு-நீதிபதி எஸ். ராஜசேகா், பாஜக மாநில இணை பொருளாளா் சிவசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →