போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சிபோதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, புத்தூா் வண்ணாரப்பேட்டை டோபி காலனியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள்
மேலவண்ணாரப்பேட்டை ஆா். ரிஷிகேஷ் (19), பாலக்கரை மா. ஹரிஹரசுதன் (20), நடு வண்ணாரப்பேட்டைத. சதாசிவம் (20) என்பதும், மூவரும் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில், இரு கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.