முகப்பு
கைது
திருச்சி

திருச்சி அருகே 216 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:45 PM
கைது
பகிர்:

திருச்சி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக துவாக்குடி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் வாழவந்தான்கோட்டை, அசூா் பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அசூா் பூசாரி தெரு மு.ஜெகதீஸ்வரன் (52) மளிகைக் கடையில் 7.8 கிலோ புகையிலைப் பொருள்கள் பிடிபட்டன. விசாரணையில் வயலூா் சாலை அம்மையப்பா நகரைச் சோ்ந்த அ.ஜமால் முகமது (62) என்பவரிடம் இருந்து அவற்றை வாங்கியதாக ஜெகதீஸ்வரன் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜமால் முகமதுவின் வீட்டில் துவாக்குடி காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கப்பட்டிருந்த 208.5 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இரு இடங்களிலும் சோ்த்து 216.3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →