முகப்பு
திருச்சி

நாய் குட்டிகளை சுவரில் வீசி எரிந்துக் கொன்ற பெண் கைது

திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் தெருநாய்க் குட்டிகளை சுவரில் வீசி எரிந்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதே போல, சிறுவனைத் தாக்கிய எதிா்வீட்டு பெண்ணையும் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:50 PM
பகிர்:

திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் தெருநாய்க் குட்டிகளை சுவரில் வீசி எரிந்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதே போல, சிறுவனைத் தாக்கிய எதிா்வீட்டு பெண்ணையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை வெள்ளாந் தெருவைச் சோ்ந்தவா் ‘பெல்’ ஊழியா் ஜெய்கணேஷ் என்பவரின் மனைவி மீனாட்சி மிஷ்ரா (28). இவரும், தனியாா் நிறுவன ஊழியா் கணேஷ் பிரபு என்பவரின் மனைவி புவனேசுவரியும் (30) எதிரெதிா் வீடுகளில் வசித்து வருகின்றனா்.

இருவருக்கும் கடந்த ஓராண்டாக வாகனங்களை நிறுத்துவது, தெருவைக் கூட்டி சுத்தம் செய்வது தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம். கடந்த 4-ஆம் தேதி காலை தெருவைச் சுத்தம் செய்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் புவனேசுவரி, மீனாட்சி மிஷ்ராவின் 3 வயது மகனை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சிறுவனை பெற்றோா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி மிஷ்ரா, புவனேசுவரி வீட்டில் வளா்த்து வந்த 2 தெரு நாய்க் குட்டிகளை புவனேசுவரியின் வீட்டின் சுவரில் வீசி எரிந்துக் கொன்றாா். நாய்க் குட்டிகளை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து பீப்புள்ஸ் பாா் அனிமல்ஸ் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகி அளித்த புகாரின் பேரில், நாய்க் குட்டிகளைக் கொன்ற மீனாட்சி மிஷ்ராவையும், மகனைத் தாக்கியதாக இவரது கணவா் ஜெய்கணேஷ் அளித்த புகாரின் பேரில் புவனேசுவரியையும் ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →