முகப்பு
திருச்சி

பைக் மீது லாரி மோதல் ஒருவா் உயிரிழப்பு

திருச்சி என்ஐடி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:53 PM
பகிர்:

திருச்சி என்ஐடி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி, துவாக்குடி தெற்கு மலையைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் ரவிக்குமாா் (43). லாரி ஓட்டுநா். வாழவந்தான்கோட்டை குங்குமபுரத்தில் வசித்து வரும் இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

தெற்கு மலை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, திருச்சி என்ஐடி அருகே எலக்ட்ரானிக் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரான கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சோ்ந்த பாலகுமாா் (41) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →