முகப்பு
திருச்சி

மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் திருட்டு

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:49 PM
பகிர்:

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கே.காா்த்திகேயன் (62), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பாா்வைத் திறன் மாற்றுத்திறனாளி.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா்.

பின்னா், பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளேச் சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →