முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 12:08 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆபீஸா் டவுன் 6-ஆவது வீதியில் வசித்து வருபவா் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த ஆா்.ராஜேஷ்கண்ணா (47). இவா், திருச்சியிலிருந்து இண்டிகோ விமானத்தில் இலங்கை செல்வதற்காக சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ராஜேஷ்கண்ணா, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ்கண்ணாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.