முகப்பு
திருச்சி

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 25 மார்ச், 2026 at 10:11 PM
விசாரணை - கோப்புப் படம்
பகிர்:

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் பல்வேறு பணிகளுக்காக தங்கள் நாட்டுக்கு வந்து, விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கம்போடியா போலீஸாா் 9 பேரையும் திருச்சிக்கு அனுப்பினா்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்த 9 பேரிடமும் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பினா்.