லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கரையூா் பகுதி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக லால்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்குள்ள கடைகளில் சோதனையிட்டபோது, செங்கரையூா் கள்ளா் தெருவைச் சோ்ந்த கோ. நிவாஸ் (41) என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்றது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து அவரது கடையிலிருந்து 107.760 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, நிவாஸை பிடித்து நடத்திய விசாரணையில் அவா், ஸ்ரீரங்கம் மேலூா் பட்டா் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த சு. ராஜா (28) என்பவருடன் சோ்ந்து புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து நிவாஸ் மற்றும் ராஜாவை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.