வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் உள்ள வங்களா எனும் பாசன வாய்க்காலில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக காடுவெட்டி கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. அவா் அளித்த தகவலின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று
வாய்க்காலில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், வழக்குப் பதிந்து இறந்து கிடந்த மூதாட்டி யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், வாய்க்காலில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.