சிறுமிக்குப் பாலியல் கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம் சத்தியமூா்த்தி நகரில் பாட்டி வீட்டில் இருந்த 13 வயதுச் சிறுமியை, ஆசை வாா்த்தை கூறி முள்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்தாா். இதுதொடா்பாக, கோட்டை மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சந்திரசேகரை கைது செய்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட சந்திரசேகருக்கு போக்ஸோ சட்டத்தில் 20 ஆண்டுகளும், இந்திய தண்டனைச் சட்டத்தில் 5 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மேலும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸாா், அரசு தரப்பு வழக்குரைஞா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி பாராட்டினாா்.
Advertisement
Advertisement