வேலூர்

ஒசூரில் வாகன உற்பத்தி அதிகரிப்பு வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்கள்!

ஒசூர், செப். 20: ஒசூர் அசோக் லேலண்ட், டிவிஎஸ். டட்ரா டிரக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், மீண்டும் வாகன உற்பத்தி அதிகரித்துள்ளது.   ஏற்கெனவே வேலைவாய்ப்பை இழந்த பலர் தங்களது

டி.ஞானபிரகாசம்

ஒசூர், செப். 20: ஒசூர் அசோக் லேலண்ட், டிவிஎஸ். டட்ரா டிரக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், மீண்டும் வாகன உற்பத்தி அதிகரித்துள்ளது.

  ஏற்கெனவே வேலைவாய்ப்பை இழந்த பலர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், தற்போது வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.

  கடந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தது. இதனால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

  இதனால் ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக வாகன உற்பத்தியைக் குறைத்து, குறைந்த வாகனங்களை மட்டுமே தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வந்தன.

  அசோக் லேலண்ட் நிறுவனம் தங்களது தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு 3 நாள்கள் மட்டுமே வேலை வழங்கி, 4 நாள்கள் விடுமுறை அளித்து வந்தது. டிவிஎஸ் நிறுவனம் தங்களது தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்தது. மேலும், தாற்காலிகத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தியது.

  இதைனையடுத்து, பெரிய நிறுவனங்களை நம்பி இயங்கி வந்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

  ஒசூரில் 2 சிறுதொழில் நிறுவனத்தினர் தொழிற்சாலைகளை நடத்த முடியாமலும், வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்றது.

  இந்நிலையில் தற்போது இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் உற்பத்தியைச் செய்து முடிக்க முடியாமல் தொழில் நிறுவனத்தினர் தவித்து வருகின்றனர்.

  ஒசூரில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, வேலை இல்லாத நேரத்தில் பணியில் இருந்த வேலையாள்களை அனுப்பிவிட்டதால், தற்போது தொழிற்சாலைக்கு தினக் கூலிகுக் கூட ஆள்கள் கிடைப்பதில்லை.

  அசோக் லேலண்ட் நிறுவனம் தினமும் 70 கனரக வாகனங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், 35 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்து வருவதாக அத்தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு தாற்காலிகப் பணியாளர்களை வேலையில் அமர்த்த வேண்டிய நிலையை நிர்வாகம் ஆலோசிக்கிறதாம்.  இதே போல் சிறு

மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் வேலை ஆள்கள் தேவைப்படுகின்றனர்.

  "ஒசூரில் வேலைவாய்ப்பு அதிக அளவில் இருப்பதை அறிந்து வேலையில்லாத இளைஞர்கள் கல்வித் தகுதிக்கேற்ப தொழிற்சாலைகளைத் தேர்வு செய்து பயனடையலாம்' என ஹோஸ்டியா சங்கத் தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ஞானசேகரன் ஆகியோர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT