வேலூர்

விவசாயிகளுக்கு பயனளிக்காத கொடியாளம் அணை!

ஒசூர் ஆக. 21: விவசாயிகளுக்கு பயனளிக்காமல் உள்ள கொடியாளம் அணையில், தண்ணீர் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  கர்நாடக மாநிலம் நந்தி கில்ஸ் மலைப் பக

டி.ஞானபிரகாசம்

ஒசூர் ஆக. 21: விவசாயிகளுக்கு பயனளிக்காமல் உள்ள கொடியாளம் அணையில், தண்ணீர் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 கர்நாடக மாநிலம் நந்தி கில்ஸ் மலைப் பகுதியில் உருவாகும் தென்பெண்ணை ஆறு ஒரத்தூர் ஏரி வழியாக, தமிழக எல்லையிலுள்ள கொடியாளம் கிராமத்தில் நுழைந்து கெலவரப்பள்ளி அணையை கடந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு செல்கிறது.

 இந்நிலையில், கொடியாளம் கிராமத்தில் 1972-ல் உந்துநீர் பாசனத் திட்டத்தின் கீழ் |60 லட்சம் செலவில் சுமார் 150 ஏக்கர் பரப்பில் கொடியாளம் அணையை தமிழக அரசு கட்டியது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் மழை நீரை இந்த அணையில் தேக்கி, மின் மோட்டார் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்வதுதான் இத் திட்டத்தின் நோக்கம்.

 இந்த அணை மூலம் கொடியாளம், கொத்தப்பள்ளி, கக்கதாசம், சேவகானப்பள்ளி, சொக்கரனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலுள்ள சுமார் 1,600 ஏக்கர்  பாசன வசதி பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 இந்த அணையின் மட்டத்தை உயர்த்திக் கட்டினால் கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும் என அணை கட்டுமானப் பணி தொடக்கத்தின்போது கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த அணையை முழுமையாக கட்டாமல் தரை மட்டம் வரையில் கட்டியதுடன், பணியை மேலும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.  இதனால் தண்ணீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதால், மழை நீர் முழுவதும் கெலவரப்பள்ளி அணைக்கு செல்கிறது.   தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த அணையின் மட்டத்தை உயர்த்த  முடியவில்லை என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கட்டி முடித்து 40 ஆண்டுகாலம் ஆகியும் இந்த அணை கட்டியதன் நோக்கமே நிறைவேறவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

 இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுந்தரம கூறியது:

 கொடியாளம் அணைக் கட்டுமானப் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீர் கொடியாளம் அணையில் தேக்கி வைக்க முடியாது. வரும் தண்ணீர் அப்படியே கெலவரப்பள்ளி அணைக்குச் சென்றுவிடும். அங்கு 481 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். பின்னர் அங்கிருந்து கே.ஆர்.பி. அணைக்கு தண்ணீர் செல்லும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT