முகப்பு
வேலூர்

பதவி உயர்வு பெற்றும் ஊதிய உயர்வு பெறாத 125 சிறப்பு எஸ்.ஐ.க்கள்

திருவண்ணாமலை, மே 18:திருவண்ணாமலை மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் 125 சிறப்பு எஸ்.ஐக்கள் தவிக்கின்றனர். காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தலைமைக் காவலர்களாக பணி முடித்தவர்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:53 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:27 PM

திருவண்ணாமலை, மே 18:திருவண்ணாமலை மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் 125 சிறப்பு எஸ்.ஐக்கள் தவிக்கின்றனர்.

காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தலைமைக் காவலர்களாக பணி முடித்தவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வை தமிழக அரசு வழங்கி வருகிறது.

மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரம், ஊரகம், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி காவல் உட்கோட்டங்களில் நடப்பாண்டு 125 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Advertisement

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனைவரும் சிறப்பு எஸ்.ஐக்களாக காவல் நிலையங்களில் பதவி ஏற்றனர். மூன்று மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. சிறப்பு எஸ்.ஐக்களாக பதவி உயர்வு பெற்றுள்ள அனைவருக்கும் குறைந்தது ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை ஊதியம் உயர்வு கிடைக்கும்.

மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் தான் ஊதிய உயர்வுக்கான ஆணை வழங்க வேண்டும்.

ஆனால் ஊதிய உயர்வு வழங்க வேண்டிதற்கான ஆணைகள் இன்னும் காவல்துறை தலைமையகத்தில் இருந்து வரவில்லை என பதில் கூறுகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு ஊதிய உயர்வு ஆணை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சிறப்பு எஸ்.ஐக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

சிறப்பு எஸ்.ஐக்கள் அனைவரும் காவல்துறை வழங்கும் சீருடை, ஷூக்களையே அணிய  வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவையும் இதுவரை தரப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.