வேலூர்

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை

குடியாத்தம், செப்.5: புதிதாக திறக்கப்பட்டுள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனை கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி ஆளாகி வருகின்றனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற காமரா

கே. நடராஜன்

குடியாத்தம், செப்.5: புதிதாக திறக்கப்பட்டுள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனை கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி ஆளாகி வருகின்றனர்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற காமராஜர், குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் 1954-ம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, நகரின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனையை கட்டி அவர் திறந்து வைத்தார்.

அக்கட்டடம் பழுதானதையடுத்து, தமிழக சுகாதார திட்டம் சார்பில் சுமார்  3.50 கோடியில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது.

16.2.2010 அன்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர்.

குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

இம்மருத்துவமனைக்கு தினமும் 1,500 முதல் 1,700 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 200 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

புதிய மருத்துவமனை கட்டடத்தில் 120 படுக்கைகள் உள்ளன. அதற்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் தரையில் போடப்பட்டுள்ள கோரைப்பாயில் படுக்க வைக்கப்படுகின்றனர் (படம்).

இதைத் தவிர பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்தும், மோடிகுப்பம், பரதராமி, கல்லப்பாடி, கூடநகரம், மேல்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் தீவிர சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இம்மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் உள்பட 17 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். தற்போது 1 மயக்கவியல் மருத்துவர், 1 குழந்தை நல மருத்துவர், 2 பொது மருத்துவர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் கண் மருத்துவர் பணியிடம் 3 மாதங்களாக காலியாக உள்ளது. எலும்பு முறிவு சிகிச்சை அளிக்க இதுவரை மருத்துவர்களே நியமிக்கப்படவில்லை.

இங்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் வசதி செய்துத் தரப்படவில்லை.

நோயாளிகள் மருந்து வாங்கும் கவுன்டர் எதிரே மேற்கூரை அமைக்கப்படாததால்,  அவர்கள் வெட்ட வெளியில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து மருந்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமைதோறும் மருந்து வாங்க வரும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டண கழிவறைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால், வளாகத்திலேயே நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் மருத்துவர்கள், பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதோடு, அவ்வப்போது வாகனத் திருட்டுகளும் நடைபெறுகிறது. எனவே, இங்கு இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

மருத்துவமனையில் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவுக்கு போதிய இடவசதி இல்லை. இதனால் சிகிச்சைக்கு வருவோருக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் யுனானி, ஹோமியோ, ஆயுர்வேதம் போன்ற சிகிச்சைப் பிரிவுகள்  தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT