முகப்பு
வேலூர்

வியாபாரிகளிடம் சிக்கிய விவசாயிகளை அரசு மீட்குமா?

ஒசூர், செப். 28: ஒசூரில் காய்கறிகளை பயிர் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி, அவர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.  ஒசூரில் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ந

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 7:22 PM

ஒசூர், செப். 28: ஒசூரில் காய்கறிகளை பயிர் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி, அவர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

 ஒசூரில் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகளைப் பயிர் செய்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, பேரிகை, பாகலூர் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர்.

 இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், செüசெü, காலிஃப்ளவர், தக்காளி, முட்டைகோஸ், குடைமிளகாய், வெங்காயம் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

Advertisement

 கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 சிறு விவசாயிகள் தாங்கள் பயிர் செய்து வரும் காய்கறிகளை ஒசூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

 இதனால் ஒசூர் உழவர் சந்தையில் தினமும் 100 முதல் 150 டன் காய்கறிகள் விற்பனையாகின்றன.

 பெரும் விவசாயிகள் பயிர் செய்து வரும் காய்கறிகளை பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடிக்கு கொண்டு செல்கின்றனர்.

 பத்தளப்பள்ளியில் 200 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மொத்த விற்பனை அங்காடிக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 500 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இது தனியார் நடத்தும் மொத்த விற்பனை அங்காடி. இங்கு விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளிடம் இருந்து மொத்த விற்பனை விலையில் 10 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது.

 அவர்கள் விவசாயிகளுக்கு உதவுவுது போல் கடன் வழங்கி, அவர்கள் பயிர் செய்யும் காய்கறிகளை விலைக்கு வாங்கும்போது 10 சதவீத கமிஷன் மட்டுமின்றி விதை, உரம், பூச்சுக் கொல்லி மருந்து மற்றும் ஏற்கெனவே வழங்கிய கடனுக்கான கந்து வட்டி ஆகியவற்றிற்கான பணத்தையும் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தை தருகின்றனர்.

 கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அம்மாநில விவசாயிகள் நல்ல விலைக்கு காய்கறிகளை விற்றுச் செல்லும் நிலையில், அருகில் உள்ள ஒசூரில் நிலைமை தலைகீழாக உள்ளது.

 இதனால் ஒசூரில் காய்கறிக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அல்லது மொத்த விற்பனை அங்காடியை அரசே அமைத்து செயல்படுத்தினால், வியாபாரிகளின் பிடியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர்.

 இதற்காக அரசு புதிதாக இடம் தேடி செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

 ஒசூர் உழவர் சந்தைக்கு எதிரியில் மூடிக் கிடைக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டடத்தையே விவசாயிகளின் நலன் காக்க பயன்படுத்த முடியும் என்கின்றனர் ஒசூர் நகர சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.