முகப்பு
வேலூர்

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

வாலாஜாபேட்டை, ஜன. 8: ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கணினி பயிற்சி முகாமில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பியூலா அழகம

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வாலாஜாபேட்டை, ஜன. 8: ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கணினி பயிற்சி முகாமில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பியூலா அழகம்மாள் சனிக்கிழமை வழங்கினார்.

  டிச. 16 முதல் ஜன. 8 வரை நடைபெற்ற முகாமில், வாலாஜா கிழக்கு ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

தேசிய இளைஞர் தின விழா

ஆர்க்காடு எஸ்.எஸ்.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

 பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ராதாகிருஷ்ணன் வழங்கினார் (படம்). கல்லூரி நிறுவனர் ஏ.கே.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் வி.சி.மோட்டூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலைவர் அமராவதி தலைமையில், ஊர்வலத்தை தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.