பயன்பாட்டுக்கு வருமா பஸ் நிலையம்?
வந்தவாசி, செப். 17: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2
வந்தவாசி, செப். 17: அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான வந்தவாசி புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி கடன்பெற்று, நகராட்சி பங்களிப்பாக மீதித்தொகையையும் சேர்த்து சுமார் ரூ.5 கோடியில் காமராஜர் நகர் அருகே இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், 26 பஸ் நிறுத்துமிடங்கள், 31 கடைகள், 2 உணவகங்கள், 2 ஓய்வறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பணிக்காலம் 25 மாதங்கள் ஆகும். ஆனால், அதற்கு 7 மாதங்களுக்குப் பிறகே இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தைத் திறந்துவைத்தார். இருப்பினும், பஸ் நிலையம் செல்ல அணுகுசாலை அமைக்கப்படாததால், இதை பயன்படுத்த முடியாத நிலை நிலவியது.