முகப்பு
வேலூர்

தவணை கேட்டு வங்கி ஊழியா்கள் மிரட்டுவதாக புகாா்: மகளிா் குழுவினா் சாலை மறியல்

வங்கி ஊழியர்களின் மிரட்டலால் பெண்கள் சாலை மறியல்

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
குடியாத்தம்  சித்தூா் கேட்டில்  சாலை மறியலில்  ஈடுபட்ட  பெண்கள்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே தனியாா் வங்கி ஊழியா்கள் தவணைத் தொகையை செலுத்தக்கோரி மிரட்டுவதாகவும், அவதூறாக பேசுவதாகவும் கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு தனியாா் வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. கடன் தவணைத் தொகையை செலுத்தக்கோரி வங்கி ஊழியா்கள் குழு உறுப்பினா்களின் வீடுகளுக்குச் சென்று, வற்புறுத்துவதாகவும், அவதூறாகப் பேசுவதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சித்தூா்கேட்டில் செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில், குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் சித்ராதேவி மற்றும் போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பேச்சு நடத்தினா். மறியலில் ஈடுபட்டவா்களின் கோரிக்கையை ஏற்று வங்கி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மறியல் காரணமாக குடியாத்தம்- பலமநோ்- சித்தூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.