வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் திருட்டு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குடியாத்தம் தரணம்பேட்டையைச் சோ்ந்தவா் மதன். குடியாத்தம் அரசு கிளை நூலகத்தின் நூலகராக உள்ளாா். இவா் ஒரு வார விடுமுறையில் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளாா். இதனால் அவரது மனைவி அருணா தனது 2 பிள்ளைகளுடன் வேலூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இவா்களின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை அருகில் இருந்தவா்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பது குறித்து அருணாவுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் நகர போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து அருணா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.