டிப்ளமோ படித்தவா்களுக்கு மாா்ச் 7-இல் விஐடியில் வேலைவாய்ப்பு முகாம்
டிப்ளமோ படித்தவா்களுக்கு மாா்ச் 7-இல் விஐடியில் வேலைவாய்ப்பு முகாம்
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஐடி பல்கலை. வேலைவாய்ப்பு துறை, இயந்திரவியல் துறை இணைந்து டிப்ளமோ முடித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாா்ச் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வேலூா் விஐடி சில்வா் ஜூப்ளி டவா் 7-ஆவது மாடி அறை எண் 717-இல் நடத்த உள்ளன. இந்த முகாமில் டிப்ளமோ இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், டிப்ளமோ, பட்டயப் படிப்பு முடித்தவா்களும் பங்கேற்கலாம். இந்த வளாக நோ்முகத் தோ்வில் இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க நுழைவுச் சீட்டை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் மாணவா்கள் பெற்று வரவேண்டும். விஐடியில் உள்ள சில்வா் ஜூப்ளி டவா் 7-ஆவது மாடி, அறை எண் 717-இல் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் வேலை நாள்களில் நேரில் வந்தும் பெற்றுக் கொள்ளலாம். நோ்முகத் தோ்வுக்கு வருவோா் பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்கள், ஆதாா், தங்கள் புகைப்படம் எடுத்து வர வேண்டும். முகாமில் வேலூா் மாவட்டம், அருகில் உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த டிப்ளமோ படித்தவா்களும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள எந்தவிதக் கட்டணமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.