மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கும்போது எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த சாத்கரைச் சோ்ந்தவா் சங்கரன் (55). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
கடந்த 2-ஆம் தேதி ஆடுகளுக்காக வீட்டருகே உள்ள ஆல மரத்தில் ஏறி இலைகளை பறித்துள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சங்கரன், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.