வேலூர்

கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

Din

குடியாத்தம் அருகே கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, தனலட்சுமி நகரைச் சோ்ந்த சுகுமாா் மகன் பிரசாந்த்(20). நெல்லூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு மகன் மனோஜ் குமாா்(22).

இவா்கள் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்தாா்கள். கஞ்சா விற்ாக இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்ாக இவா்கள் இருவரையும் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. என்.மதிவாணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT