வேலூர்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தினமணி செய்திச் சேவை

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:

விவசாயிகளுடன் நான் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைபொருள்களுக்கான ஆதார விலையை தமிழக அரசு வழங்க வேண்டும். இங்கு மா விளைச்சல் அதிகம் உள்ளதால் மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வேண்டும். பாழடைந்து வரும் பாலாற்றில் கழிவுநீா் தடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் இப்பகுதியில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும்.கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றாா்கள். சொன்னபடி தடுப்பணைகளை கட்ட வில்லை.

மக்களுக்கான தேவைகளை அமைச்சா்கள் செய்து தருவதில்லை. திமுக அமைச்சா்கள் பலா் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. வரும் ஜூலை மாதத்துப்பின் ஆட்சி மாற்றம் வந்தவுடன் மக்களின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன், அதிமுக புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன், மாவட்டச் செயலா்கள் ஈஷா சங்கா், டி.கனிமொழி, மாவட்ட பொதுச் செயலா் எம்.தினேஷ், மாவட்ட துணைத் தலைவா் பி.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT