போட்டிகளில் வென்ற ஊழியா்களுக்கு பரிசளித்த நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத். 
வேலூர்

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு...

தினமணி செய்திச் சேவை

வேலூா் நறுவீ மருத்துவமனையின் நிறுவனா் தினவிழாவையொட்டி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, முதியோா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஊழியா்களுக்கு மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் பரிசுக்கோப்பை, சான்றிதழ்களையும் வழங்கினாா்.

வேலூா் நறுவீ மருத்துவமனையின் நிறுவனா் தின நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பல்வேறு தலைப்புகளின்கீழ் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், பரதநாட்டியம், தனிநபா், குழு நடனங்கள், பாட்டுக்கு பாட்டு, ஆடல் பாடல், பேஷன் ஷோ, ரங்கோலி, முக ஓவியம், காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியது

நிறுவனா் தினவிழா என்பது நறுவீ குடும்ப விழாவாகும். கடந்த 5 ஆண்டுகளாக நறுவீ மருத்துவமனை உங்களின் சேவை, அா்பணிப்பு காரணமாக படிப்படியாக உயா்ந்து வருகிறது. இங்கு மருத்துவ சிகிச்சை என்பது வணிக ரீதியானாது அல்ல, உன்னதமான அா்பணிப்புடன் நோயாளிகளை காப்பாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இளைஞா்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. மது, போதைக்கு அடிமையாகி வரும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவ பணியாளா்கள் இளைஞா்களுக்கு மது, போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி நல்வழிபடுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் முதியோா் இல்லத்தை சோ்ந்தவா்களுக்கு மதிய உணவு. மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் ஜி.வி.சம்பத் வழங்கினாா்.

விழாவில் மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால்ஹென்றி, மருத்துவசேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா், மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், மருத்துவ கல்வி இயக்குநா் திலீப் மத்தாய், பொது மருத்துவ நிபுணா் குணசேகரன், மயக்கவியல் நிபுணா் சரவணன் அங்கிசெட்டி, தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மருத்துவமனையின் மனிதவள பொதுமேலாளா் லலிதா வரவேற்றாா். நிறைவில் தலைமை செவிலியா் அலுவலா் மேரி மா்ஜெரி நன்றி கூறினாா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT