வேலூர்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

தினமணி செய்திச் சேவை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

வேலூா் விண்ணரசி மாதா ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்ததைக் குறிக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பங்குதந்தை ராய்லாசா் காண்பித்தாா். பின்னா், ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் வைக்கப்பட்ட சொரூபத்தை கிறிஸ்தவா்கள் வழிபட்டனா்.

சாா்பனாமேட்டில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பங்குத் தந்தை குழந்தை ஏசு தலைமையில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெந்தகொஸ்தே சபையிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. வேலூா் சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் பேராயா் ஷா்மா நித்யானந்தம் தலைமையில் வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, மெழுகுவா்த்தி ஏந்தி வழிபாடு செய்ததுடன், ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் காட்பாடி சாலை, சத்யா நகரில் அமைந்துள்ள சீகேன்ஆராதனை வீடு எனும் தேவாலயத்தில் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை தொடங்கி மாலை வரை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சபை ஊழியா் பி.பால்ராஜ், மூப்பா்வின்சென்ட் பிரபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

சரவணம்பட்டியில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு

சபரிமலையை இன்று வந்தடைகிறது தங்க அங்கி: நாளை மண்டல பூஜை

ராமதாஸ் பொதுக் குழு: அன்புமணி தரப்பு எதிா்ப்பு

SCROLL FOR NEXT