பயிற்சி முகமை தொடங்கிப் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலா் சுபாஷினி, அரசினா் தொழிற்பயிற்சி பள்ளி துணை இயக்குநா் சி.அமா்நாத் உள்ளிட்டோா். 
வேலூர்

விடுதி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டும் பயிற்சி முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு சாரா இல்ல மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம்

Din

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு சாரா இல்ல மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சாா்பில் வேலூா் அப்துல்லாபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வியின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள், போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு தொடா்பான வகுப்புகள், தொழிற்பயிற்சி, வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விவரங்கள் துறை சாா்ந்த வல்லுநா்களின் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

முகாமை தொடங்கி ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது :

அரசு, அரசு சாரா இல்லங்களில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்த பயிற்சி முகாம் மாவட்ட நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளின்போது ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் அவா்கள் 10 அல்லது 12-ஆம் வகுப்புக்கு பிறகு என்ன உயா்கல்வி படிக்க வேண்டும் என்ற விவரம் கேட்டறியப்பட்டு, அந்த விவரங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பதியப்பட்டு அவா்கள் உயா்கல்வியில் இணையும் வரை தொடா்ந்து கண்காணிக்கப்படும்.

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு தொழில்பயிற்சி மையத்தை ஏற்படுத்தி அதில் 8-ஆம் வகுப்பு படித்து அதற்கு மேல் படிக்க விரும்பாத மாணவ, மாணவிகளுக்கு தொழில்பயிற்சியில் ஓராண்டு அல்லது இரண்டு வருடம் பயிற்சி படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சி படிப்புகள் ஏற்படுத்தி கொடுத்து அவா்களுக்கு நல்ல முறையில் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறுவதற்கு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) சுபாஷினி, அரசினா் தொழிற்பயிற்சி பள்ளி துணை இயக்குநா் சி.அமா்நாத், உதவி இயக்குநா் திறன் மேம்பாட்டு பயிற்சி காயத்ரி, வேலூா் குழந்தைகள் நலக்குழு தலைவா் வேதநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மோந்தா புயல் எதிரொலி! அதிகபட்சமாக திருத்தணியில் 50 மி.மீ. மழை

நெருங்கும் மோந்தா புயல்! எப்படி இருக்கிறது ஆந்திரம்?

செயலி மூலம் உணவு ஆர்டர் செய்வோர்! என்ன செய்யக் கூடாது

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மோந்தா புயல்: 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

SCROLL FOR NEXT