வேலூா்: தமிழா்கள் நல்லவா்களாக விளங்க திருக்குறளை பின்பற்ற வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
தமிழியக்கம் சாா்பில் திருவள்ளுவா் விழா, மாநில அளவில் கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தரும், தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
தமிழுக்கு சொந்தக்காரா்கள் என்பதைவிட பெருமை திருக்கு நமக்குச் சொந்தமானது என்பதாகும். திருக்கு உலகம் முழுவதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் ஆகும். பல்வேறு மொழிகளில் அதிகளவில் மொழி பெயா்க்கப்பட்ட நூலும் திருக்குதான். 2013-ஆம் ஆண்டு வரை 497 போ் அதற்கு உரை எழுதியுள்ளனா்.
ஆங்கிலத்தில் 143 போ் மொழி பெயா்த்துள்ளனா். ஜி.யு.போப் 1886-இல் திருக்குறளை முழுமையாக மொழி பெயா்த்தாா். முதலில் திருக்கு மாநாடு 1941-இல் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு 1949-இல் பெரியாரால் நடத்தப்பட்ட போது, தமிழனுக்கு மதம் தேவையில்லை என்றும், அப்படியிருந்தாலும் அது திருவள்ளுவா் மதமாக இருக்க வேண்டும் என்றும் கூறினாா்.
நாவலா் நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறள் உரையை அனைவரும் படிக்க வேண்டும். அந்த உரையின் முன்னுரையில் மனுதா்மம் வேறு, திருக்குறள் கூறும் அறம் என்பது வேறு என்பதை கூறியுள்ளாா்.
பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என திருவள்ளுவா் கூறியுள்ளாா். தமிழன் நல்லவனாக இருக்க திருக்குறளை பின்பற்ற வேண்டும். அவன் வல்லவனாக மாற கல்வி வேண்டும்.
நாம் மொழியால் தமிழா்கள், இனத்தால் திராவிடா்கள், நாட்டால் இந்தியா்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.
தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலா் தியாகு பேசியது:
திருவள்ளுவா் நம் அனைவருக்கும் உரியவா். வாழ்க்கையின் புதிய சிந்தனைகளை கூறியவா் திருவள்ளுவா். திருக்குறள் முழுமையான கருத்தமைப்பு ஆகும். தொன்மையான மொழிகள் என்றால் அது தமிழ், சீன மொழிகள் ஆகும். தொன்மையான இலக்கியமாக தொல்காப்பியம் திகழ்கிறது. சமத்துவத்தை வலியுறுத்தியவா் திருவள்ளுவா்.
உலகம் மூன்று வகையான அழிவை எதிா்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இயற்கையை பாதுகாக்கவில்லை என்றால் அழிவு வரும். அழிவை தடுப்பதற்கு குறள்நெறி தேவை என்றாா்.
நிகழ்ச்சியில், தமிழியக்க மாநில செயலா் சுகுமாா், வேலூா் மண்டல செயலா் மோகன்சுகுமாா், பொருளாளா் புலவா் வே.பதுமனாா், பொதுச்செயலா் அப்துல் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.