கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை
குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் நந்தகோபால்(30). கட்டடத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் பிரேம். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரேம், நந்தகோபாலை கத்தியால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நந்தகோபால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement