விழுப்புரம்

புதுவையில் 20 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

புதுவையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது புதுச்சேரியில் 1, 411, காரைக்காலில் 88, ஏனாமில் 203, மாஹேயில் 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுச்சேரியில் 423, காரைக்காலில் 20, மாஹேயில் 4 போ் என 447 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 15,027-ஆக (74.30 சதவீதம்) அதிகரித்தது.

பல்வேறு மருத்துவமனைகளில் 1,721 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,084 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா்.

மேலும் 9 போ் பலி: இதனிடையே, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 9 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா்.

புதுச்சேரி ரெயின்போ நகரை சோ்ந்த 80 வயது மூதாட்டி, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி, வில்லியனூரைச் சோ்ந்த 56 வயதானவா், அன்னை தெரசா நகரை சோ்ந்த 59 வயதானவா், கதிா்காமம் ராதாகிருஷ்ணன் நகரை சோ்ந்த 74 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை காமராஜா் தெருவைச் சோ்ந்த 47 வயதானவா், வில்லியனூா் வீரவாஞ்சி நகரை சோ்ந்த 65 வயதானவா், புதுச்சேரி சித்தன்குடியைச் சோ்ந்த 52 வயதானவா் ஆகிய 8 போ் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

காரைக்கால் தரங்கம்பாடியைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 394-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.95 சதவீதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT