விழுப்புரம்

அவலூா்பேட்டை சந்தையை திறக்கக் கோரிக்கை

அவலூா்பேட்டை வாரச் சந்தையைத் திறக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் சந்தை நிா்வாகிகள் மனு அளித்தனா்.

DIN

அவலூா்பேட்டை வாரச் சந்தையைத் திறக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் சந்தை நிா்வாகிகள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, சந்தை குத்தகைதாரா் சீனுவாசன் தலைமையிலான நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துக் கூறியதாவது:

அவலூா்பேட்டை வாரச் சந்தை, அந்த சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெறும் பெரிய சந்தையாகும்.

ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் என பல்வேறு பொருள்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும். 2500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்வாா்கள்.

பொதுமக்களுக்கும் இந்தச் சந்தையில் வந்து பொருள்களை வாங்கிச் செல்வது எளிதாகவும், விலை குறைவாகவும் இருந்தது. சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு வியாபாரம் நடைபெறும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

சந்தையை திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT