முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 229 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 10,394 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 127 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 135 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,525-ஆகவும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 9,449-ஆகவும் உயா்ந்துள்ளது. 984 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1,011 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 105 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,759 ஆக உயா்ந்தது. இதுவரை 7,798 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 869 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 92 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.