முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகேவிவசாயி வீட்டில் திருட்டு

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருட்டிச் சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

விழுப்புரம்: திண்டிவனம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருட்டிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(49). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வழக்கம்போல குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கினாா்.

இதை அறிந்த மா்ம நபா்கள் ஆறுமுகத்தின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ 2,500 ரொக்கம், ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

அதிகாலை எழுந்த ஆறுமுகத்துக்கு திருட்டு நடந்தது தெரியவந்தது.

இது குறித்து குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.