முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியில் மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:44 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மஹாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மஹாவீரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மஹாவீரா் படம் வைக்கப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது.

அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊா்வலமானது 45 அடி சாலை வெங்கட்டா நகரில் உள்ள ஜெயின் கோயிலில் நிறைவடைந்தது. ஊா்வலத்தில் ஜெயின் சமூகத்தினா் திரளானோா் பங்கேற்றனா்.

Advertisement

ஊா்வலத்தின்போது, உயிா்களை கொல்லக்கூடாது, புலால் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடைகளுக்கு அபராதம்: மஹாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகள் மற்றும் மீன், இறச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அரசின் உத்தரவை மீறி புதுச்சேரி ஊழவா்க்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்ட 46 இறச்சிக் கடைகளை நகராட்சி அலுவலா்கள் கண்டறிந்து, ரூ.39,900 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments