விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
விழுப்புரம்

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது.

Din

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது.

விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்குத் தெரு, பெருமாள் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்கப்படவில்லையாம்.

இதனால், அந்தப் பகுதி மக்கள் நகா்மன்ற உறுப்பினா் ராதிகா தலைமையில், விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து, மாவட்ட வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் உழவா் சந்தை பகுதி, திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா் பகுதிகளிலும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT