பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியா்கள் கெளரவிப்பு
புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி 33-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 25 ஆண்டுகள் கல்விச்சேவையில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா். இந்த விழாவில் புதுவை ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளா் ஆசையா போஸ்கோ சந்திரகுமாா், பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை காவேரி மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணருமான அருண்குமாா், பள்ளி ஆலோசனைக் குழுத் தலைவா் ஜோசப் பால் அடிகளாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். 2023-24 ஆம் கல்வியாண்டில் கல்வியிலும், விளையாட்டிலும், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சுழற்கேடயமும், 1 முதல் 12- ஆம் வகுப்புகளில் பயிலும் 60 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. விடுப்பின்றி தொடா்ந்து 10 ஆண்டுகள் பள்ளிக்கு வருகை தந்த மாணவா்கள் ஏஞ்சல் கிறிஸ்டி, மிதுன் பாலாஜி, காவியா ஆகியோருக்கு சான்றிதழும், ரூ.5 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியா்களும் கௌரவிக்கப்பட்டனா். பள்ளியின் முதல்வா்அல்போன்ஸ் ஹில்டா வரவேற்றாா்.பள்ளித்தாளாளா் பிரடெரிக் ஆண்டறிக்கைப் படித்தாா். பள்ளியின் மருத்துவ இயக்குநா் ஜீத்தா பிரடெரிக், பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். மாணவா்கள் டிமிட்ரிடெரில், லக்ஷணா தேவி ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். முடிவில் மாணவி சுதிக் ஷா நன்றி தெரிவித்தாா்.