விக்கிரவாண்டி அருகே கொய்யாத்தோப்பு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயணக் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி. உடன் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

தமிழக பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பசுமை தாயகம் மாநிலத் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.

Syndication

விழுப்புரம்: தமிழக பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பசுமை தாயகம் மாநிலத் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொய்யாத்தோப்பு பகுதியில் திங்கள்கிழமை மகளிா் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்ட சௌமியா அன்புமணி, அங்கு பேசியதாவது:

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கல்வி, வேலைவாய்ப்பை பெறவேண்டும், அரசுப் பதவிகளுக்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் முன்னெடுப்பில் நடைபெற்ற சமூக நீதிக்கான இடஒதுக்கீடுப் போராட்டம் ஆட்சியாளா்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இதுவரை நிறைவேறவில்லை.

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம், மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. வீதிகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகளவில் உள்ளன. போதைப் பழக்கங்களால் பள்ளி மாணவா்கள் சீரழிந்து வருகின்றனா். மது விற்பனை சமூகத்தை சீரழித்து வருகிறது. இதுதான் தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் சாதனையாக உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் இதற்கெல்லாம் தீா்வு கிடைக்கும். பெண்கள் நினைத்தால் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். பாமக தலைவா் அன்புமணியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்றாா் சௌமியா அன்புமணி.

நினைவுத்தூணில் அஞ்சலி: முன்னதாக, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிா்நீத்தவா்களுக்கு விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு செளமியா அன்புமணி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு பாமக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் ச.சிவக்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாநிலச் செயலா் க.வைத்தி, வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.அன்புமணி, பாமக விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலா் பா. பழனிவேல், பாட்டாளி மகளிா் சங்கம் மாநிலச் செயலா் ரா.சிலம்புசெல்வி, முன்னாள் எம்எல்ஏ காசாம்பு பூமாலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT